பழங்குடியினர் பள்ளிகளில் கலைத்திருவிழா
பழங்குடியினர் பள்ளிகளில் கலைத்திருவிழா
பழங்குடியினர் பள்ளிகளில் கலைத்திருவிழா
UPDATED : நவ 22, 2024 12:00 AM
ADDED : நவ 22, 2024 11:30 AM
சென்னை:
பழங்குடியினர் கலாசாரத்தை எடுத்துரைக்கும் வகையில், தமிழகம் முழுதும் உள்ள, பழங்குடியினர் பள்ளிகளில், இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, பழங்குடியின கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய கலைத்திருவிழா நடக்க உள்ளது.
தேசிய தொல்குடி தினத்தையொட்டி, தமிழகம் முழுதும் உள்ள, பழங்குடியினர் மக்களுக்கு உதவும் வகையில், மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
இம்மாதம் 15ம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில், துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலம் முழுதும் உள்ள, 328 பழங்குடியின பள்ளிகளில், மாணவருக்கு ஒரு மரக்கன்று என, 24,000 மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு, பல்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுதும் உள்ள, அனைத்து பழங்குடியினர் பள்ளிகளிலும், இன்று கலைத்திருவிழா துவங்குகிறது. இவ்விழா வரும் 25ம் தேதி வரை நடக்க உள்ளது.
பழங்குடியின மாணவர்களின் அணிவகுப்பு, பழங்குடியினர் கலாசாரத்தை எடுத்துரைக்கும் வீதி நாடகம், பேச்சு, நடனம் எனப் பல்வேறு போட்டிகள் நடக்க உள்ளன. மாணவர்கள் தயார் செய்த கைவினை பொருட்கள், பழங்குடியினர் இசைக் கருவிகள், பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.