Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிற்ப பகுதியில் பயணியர் வசதிகள் தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு

சிற்ப பகுதியில் பயணியர் வசதிகள் தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு

சிற்ப பகுதியில் பயணியர் வசதிகள் தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு

சிற்ப பகுதியில் பயணியர் வசதிகள் தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு

UPDATED : ஏப் 11, 2024 12:00 AMADDED : ஏப் 11, 2024 09:06 AM


Google News
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, தொல்லியல் துறை முடிவெடுத்துள்ளது.

சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் முதுநிலை பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர், தனியார் கன்சல்டன்ட் நிறுவனத்தினர் ஆகியோருடன், தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குனர் கே.என்.பாடக், சிற்ப பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார்.

இது குறித்து, அத்துறையினர் கூறியதாவது:

ஐந்து ரதங்கள், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பகுதிகளில், சுத்திகரிப்பு குடிநீர் வசதி ஏற்படுத்த உள்ளோம். கழிப்பறை இல்லாத இடங்களில், நவீன கழிப்பறை, பாறைக்குன்று குடைவரைகள், கடற்கரை கோவில் ஆகிய பகுதிகளில், விடுபட்ட இடங்களில் நடை பாதை அமைக்க உள்ளோம்.

இரவு பாதுகாப்பிற்காக, மின் விளக்குகளை அதிகப்படுத்தி வருகிறோம். அதற்காக, கன்சல்டன்ட் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us