Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறனாய்வு தேர்வு

திறனாய்வு தேர்வு

திறனாய்வு தேர்வு


UPDATED : டிச 04, 2024 12:00 AM

ADDED : டிச 04, 2024 04:24 PM

Follow on Google

UPDATED : டிச 04, 2024 12:00 AM ADDED : டிச 04, 2024 04:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான 'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு' அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி:
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

உதவித்தொகை:

திறனாய்வு தேர்வு வாயிலாக நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தலா 500 மாணவ, மாணவியர் வீதம் மொத்தம் 1,000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு மாதத்திற்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு கல்வியாண்டில் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

தேர்வு முறை:

தமிழக அரசின் 9ம் மற்றும் 10ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமுக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் இடம்பெறும் இரு தாள்களிலும் கொள்குறிவகையில் கேள்விகள் கேட்கப்படும். முதல் தாளில் கணிதம் சார்ந்து 60 கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்து 60 கேள்விகள் இடம்பெறும்.

தேர்வு நேரம்:

முதல் தாள் காலை 10 மணிமுதல் 12 மணிவரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணிமுதல் 4 மணிவரையிலும் நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

https://dge.tn.gov.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் 50 ரூபாயும் சேர்த்து அந்தந்த பள்ளி முதல்வரிடம் வழங்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

டிசம்பர் 9

தேர்வு நடைபெறும் நாள்:
ஜனவரி 25, 2025

விவரங்களுக்கு:

https://dge.tn.gov.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap