பணி நிறைவுபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

UPDATED : மே 28, 2024 12:00 AM
ADDED : மே 28, 2024 10:07 AM

கோவை:
பணி நிறைவுபெற்ற உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பாராட்டு விழா சிங்காநல்லூர் சாலையில் உள்ள, கே.எஸ்.ஜி. கலை கல்லூரியில் நடந்தது.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாலன் வரவேற்றார்.
மாட்ட அமைப்புச் செயலாளர் சற்குணவதி, மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பணி நிறைவுபெறும் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.கீதா, பதவி உயர்வு பெற்றுள்ள நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.கீதா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கோமதி மற்றும் 10க்கும் மேற்பட்ட, பணி நிறைவடைந்த உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சங்க மாநிலத் தலைவர் அன்பரசன், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மாநிலப் பொருளாளர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.