Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு

நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு

நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு

நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு

UPDATED : பிப் 27, 2025 12:00 AMADDED : பிப் 27, 2025 09:48 AM


Google News
ஈரோடு:
டி.என்.பாளையத்தில் படிக்கும் மாணவியருக்கு வரும், 1, 2ல் நீலகிரி மாவட்டத்தில் டைப் ரைட்டிங் தேர்வு மையத்தை ஒதுக்-கீடு செய்ததை மாற்றம் செய்து தரக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர்.

நீலகிரி, கொல்லமலை சாலையில், நந்தகுமாரி என்பவர் தட்டச்சு பயிலகம் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தை ஈரோடு மாவட்டம், கோபி அருகே டி.என்.பாளையம், சத்தி - அத்தாணி பிரதான சாலைக்கு மாற்றம் செய்து, வாரியத்திடம் அனுமதி பெற்றுள்-ளனர். கடந்த நவ., - டிச., மாதத்தில் இதற்கான பணிகளை முடித்து, வாரியத்தினர் நேரடி ஆய்வு செய்து சென்றுள்ளனர். இந்நிலையில் வரும், 1, 2ல் டைப்ரைட்டிங் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதல், 2ம் தாள் தேர்வுகள் நடக்க உள்ளது. இங்கு படித்த, 31 மாணவ, மாணவியருக்கு நீலகிரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்து, ஹால் டிக்கெட் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவனத்தினர், மாணவ, மாணவியர் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:


டைப்ரைட்டிங் நிறுவனத்தை, நீலகிரியில் இருந்து டி.என்.பாளையத்துக்கு முறையாக மாற்றம் செய்து, வாரியத்தில் அனுமதி பெற்றுள்ளோம். ஆனால் இங்கு படித்த மாணவ, மாணவியருக்கு நீல-கிரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்து, ஹால் டிக்கெட் வழங்கி உள்ளனர்.

இங்கிருந்து, 6 மணி நேரம் பயணம் செய்து, இரு நாட்கள் தங்கி தேர்வு எழுத வேண்டி உள்ளது. 1 மணி நேரம் நடக்கும் தேர்வுக்கு, 6 மணி நேரம் பயணிக்க வேண்டி உள்ளது. இதில் ஒரு மாணவி கர்ப்பிணியாகவும், மற்றொருவர் உடல் நலம் முடியாதவர், சிலர் திருமணமானவர்கள் என உள்ளனர். இவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, 31 பேருக்கும், கோபியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதும்படி மாற்றி ஆணையிட வேண்டும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us