மதுரையில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

UPDATED : மார் 05, 2025 12:00 AM
ADDED : மார் 05, 2025 10:31 AM
மதுரை:
மதுரையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாலைநேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் ஜெயமங்களம் தலைமையில் நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் திரண்டனர். துணைத் தலைவர் உமாநாத் துவக்கி வைத்தார்.
மாநில செயலாளர் பாக்கியமேரி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் வீரையா, செயலாளர் சேதுராமன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி நீதிராஜன், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் கவுசல்யா, தவமலர், சித்ரா, வரலட்சுமி உட்பட பலர் பேசினர்.
1993 முதல் பதவி உயர்வு பட்டியலில் உள்ளோருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பிரதான மையங்களுக்கு பதவி உயர்வில் சென்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களை அரசுஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.