எந்தெந்த துறைகளில் என்னென்ன பணிகள் மாணவர்கள் தெரிந்துகொள்ள அறிவுரை

UPDATED : மே 17, 2024 12:00 AM
ADDED : மே 17, 2024 08:08 AM
சேலம்:
சேலம், நெத்திமேடு ஜெயராணி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
அதில் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் பேசியதாவது:
இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு படிக்கும்போதே பிளஸ் 1 வகுப்பில் என்ன பிரிவில் சேரலாம் என்ற கனவோடு படிக்கின்றனர். அந்த அளவு சிந்தனையோடு படிக்கும் மாணவ, மாணவியர், எந்த நோக்கத்துக்கு படிக்கிறோம் என்பதை சிந்தித்து படிக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் நோக்கம் நிறைவேறும். சில மொழிகளையாவது தெரிந்துகொள்ள வேண்டும். இது உங்கள் படிப்பு, நோக்கம், வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். அரசு பணி மட்டும் தான் நிரந்தரம் என நினைக்க வேண்டாம். தனியார் பணியிலும் நிரந்தரம் உண்டு. தனியார் பணியில் இலக்கு நிர்ணயிப்பது போல் அரசு பணியிலும் இலக்கு உண்டு.
அரசு பணியில் பணிபுரியும்போது காலம், நேரம் பார்க்காமல் பணிபுரிய வேண்டும். இதில் மத்திய அரசு பணி, மாநில அரசு பணி உள்ளன. இதில் எந்தெந்த துறைகளில் என்னென்ன பணிகள் உள்ளன என்பதை எல்லாம் இப்போதே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் திறமைக்கு ஏற்ப மத்திய, மாநில, தனியார் நிறுவனங்களில் ஏதேனும் பணி கிடைக்க பெறலாம். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் படித்துவந்தால் நிச்சயம் உங்கள் கனவு நனவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.