Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ புதிய ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை

புதிய ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை

புதிய ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை

புதிய ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை

UPDATED : டிச 23, 2024 12:00 AMADDED : டிச 23, 2024 10:40 AM


Google News
சென்னை:
தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், 102 அரசு மற்றும் 311 தனியார் ஐ.டி.ஐ.,க்கள் ஏற்கனவே செயல்படுகின்றன. புதிதாக கடலுார், திருவண்ணாமலை, திண்டுக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், திருப்பத்துார், துாத்துக்குடி மாவட்டங்களில், தலா ஒரு ஐ.டி.ஐ., துவக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சேர விரும்பும் மாணவர்கள், உரிய கல்வி சான்றுகளுடன் நேரில் சென்று சேரலாம்.

மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதி வரை நடக்கும். ஐ.டி.ஐ.,யில் சேரும் மாணவர்களுக்கு, இலவச பயிற்சியுடன், கல்வி உதவித்தொகையாக, மாதம் 750 ரூபாய் வழங்கப்படும். மேலும் இலவசமாக சைக்கிள், சீருடை, ஷூ, பயிற்சி கருவிகள், பஸ் பாஸ் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, 94990 55689 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us