நர்சிங் பட்டப்படிப்பிற்கு நுழைவு தேர்வு மூலம் சேர்க்கை

UPDATED : ஏப் 19, 2024 12:00 AM
ADDED : ஏப் 19, 2024 10:58 AM

புதுச்சேரி:
புதுச்சேரியில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லுாரிகளில் பி.எஸ்சி., நர்சிங் பட்டப் படிப்பு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்தாண்டு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த இந்திய நர்சிங் கவுன்சில் அறிவுரை வழங்கியது. அதனையொட்டி, நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்தது.
நுழைவுத் தேர்விற்கு பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்பால், நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை சுகாதாரத்துறை கைவிட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்தது.
இந்நிலையில், நடப்பு 2024 - 25ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம் நடத்த கவர்னர் ராதாகிருஷ்ணன் அனுமதி அளித்துள்ளார். இதற்கான உத்தரவினை சுகாதாரத்துறை சார்பு செயலாளர் முருகேசன் வெளியிட்டுள்ளார்.
மேலும், தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான பிற விதிமுறைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும். தேர்வு தேதிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.