காஞ்சியில் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை

UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 10:09 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், நடப்பாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குறிப்பாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர், ஆதரவற்றோர், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்பரவு தொழிலாளியின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தகுதி வாய்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
இதுபோன்ற நபர்கள், காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், இடை நிலை மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க மாவட்ட கல்வி அலுவலர், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகிய அலுவலகங்கள் மற்றும் rte.tnschools.gov.in இணையதளத்தில், நாளை முதல், மே- 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஒரே பள்ளிக்கு, கூடுதல் விண்ணப்பங்களை விண்ணப்பித்து இருந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்து, மாணவர் சேர்க்கை நடைபெறும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.