மாணவர்கள், சிறார்கள் ஓட்டும் டூவீலர்களால் விபத்து அபாயம்!

UPDATED : ஜூலை 19, 2024 12:00 AM
ADDED : ஜூலை 19, 2024 09:12 AM

தேனி:
மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், சிறார்கள் டூவீலர்களை ஓட்டுவது அதிகரித்து வருகிறது. அதிலும் ஒரு டூவீலரில் 3, 4 பேர் பயணிப்பதும் தொடர்கிறது.
இதனை கட்டுப்படுத்தவும், விபத்துக்கள் நடக்கும் முன் போலீசார், பெற்றோர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டூவீலர்களை 18 வயதிற்கு மேற்பட்டோர்கள் தான் இயக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், பலரும் அதனை பின்பற்றுவது இல்லை. குறிப்பாக உயர்நிலை, மேல்நிலை படிக்கும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் டூவீலர்கள் வாங்கி கொடுப்பதை விரும்புகின்றனர். பள்ளி மாணவர்கள் பலரும் டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனங்களை நகர்பகுதியில் இயக்குவது தொடர்கிறது.
அதே போல் ஒரு டூவீலரில் 3,4 பேர் பயணிப்பதும் தொடர் கதையாக உள்ளது.
சமீபத்தில் மதுரையில் பள்ளிக் கல்லுாரி மாணவர்கள் டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனங்கள் இயக்கியதால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த நடவடிக்கைகளில் போலீசார் ஆர்வம் காட்டுவது இல்லை. நகரில் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மட்டும் டூவீலர்களை சோதனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் மட்டும் இன்றி சிலர் குடும்பத்துடன் 4, 5 பேர் டூவீலர்களில் பயணிக்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.