பாடம் நடத்த மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறை
பாடம் நடத்த மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறை
பாடம் நடத்த மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறை
UPDATED : ஜூன் 25, 2024 12:00 AM
ADDED : ஜூன் 25, 2024 07:01 AM

சென்னை:
ஸ்மார்ட் வகுப்பறைகளை பயன்படுத்தும் முறை குறித்து, வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு:
ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஆகியவற்றில், உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் திறன் மிகு வகுப்பறைகளான, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தவும், பராமரிக்கவும், நிலையான வழிகாட்டு செயல்முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
கற்றல், கற்பித்தலுக்கு மட்டுமே திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்த வேண்டும். சரியான கால அட்டவணை தயாரித்து, வகுப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.
திறன்மிகு வகுப்பறை மற்றும் ஆய்வகங்களின் பராமரிப்பு முறைகளை, கெல்ட்ரான் நிறுவனத்தின் வழியே மேற்கொள்ள வேண்டும். ஹைடெக் ஆய்வகங்களை கற்றல், கற்பித்தலுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.