Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெங்., பல்கலையில் அமைகிறது புதிய விளையாட்டு வளாகம்

பெங்., பல்கலையில் அமைகிறது புதிய விளையாட்டு வளாகம்

பெங்., பல்கலையில் அமைகிறது புதிய விளையாட்டு வளாகம்

பெங்., பல்கலையில் அமைகிறது புதிய விளையாட்டு வளாகம்

UPDATED : டிச 31, 2024 12:00 AMADDED : டிச 31, 2024 12:20 PM


Google News
பெங்களூரு:
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களை தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு தயார்படுத்தும் நோக்கத்திற்காக புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும், என்று பெங்களூரு பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனரக தலைவர் (பொறுப்பு) கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

இன்றைய போட்டியுகத்தில் மாணவர்களின் பயிற்சித் திறனை அதிகரிக்க, பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டி.பி.ஆர்., என்ற திட்ட அறிக்கை குறித்து, சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பல்கலைக்கழக நிதி நிலைக்கு ஏற்ப விளையாட்டு வளாகம் படிப்படியாக கட்டப்படும். பெங்களூரு பல்கலைக்கழக ஞானபாரதியில், பி.எட்., எம்.எட்., படிக்கும் மாணவர்களுக்காக விசாலமான விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் ஆகியவை உள்ளன.

இதுதவிர பல்கலையின் கீழ் உள்ள 245 இணைப்பு கல்லுாரிகளில் பயிலும் சிறப்பான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் மாநில, தேசிய, சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அவர்கள் தயார் செய்யப்படுவர். இவர்கள் பயிற்சிக்காக புதிய விளையாட்டு வளாகம் தேவைப்படுகிறது.

இதற்காக ஞானபாரதி வளாகத்தில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தடகள செயற்கைத்தடம், விளையாட்டு விடுதி, உள் விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைத்து, கால்பந்து, வாலிபால், தடகள விளையாட்டுப் பயிற்சி வழங்குவது என்றும் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், 50 கோடி ரூபாயில் விளையாட்டு வளாகம் கட்டப்படுகிறது. இதன் மூலம், பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுகிறது. சர்வதேச தரத்துடன் புதிய விளையாட்டு வளாகம் கட்டப்பட்டால், நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us