சுகாதாரத்துறை அமைச்சரின் உத்தரவுக்கு புது சிக்கல்

UPDATED : ஜூலை 07, 2024 12:00 AM
ADDED : ஜூலை 07, 2024 10:35 PM
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், புதிய பஸ் ஸடாண்டில் இருந்து, மருத்துவக் கல்லுாரிக்கு பொதுமக்கள் சென்று வர, கிட்டத்தட்ட 4 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டிய சூழல் உள்ளது.
ஆனால், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதி அருகே உள்ள மருத்துவக் கல்லுாரியில் சுற்றுச்சுவரை உடைத்து, ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பாதையை திறந்தால், ஐந்து நிமிடத்தில் மருத்துவக் கல்லுாரிக்கு சென்று விடலாம்.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பாதையை, மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் பாதுகாப்பு என கூறி, சுற்றுச்சுவர் கட்டபட்டது.
ஆனால், இரவு நேரங்களில் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பொதுமக்கள், மருத்துவக் கல்லுாரிக்கு செல்ல நேரடியாக பஸ் வசதி இல்லாமல், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு பணம் கொடுத்து சுற்றிச் சென்று வருகின்றனர்.
இந்த பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரிக்கு வந்த சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் எம்.பி., முரெசாலி, எம்.எல்.ஏ.,க்கள், மேயர் ராமநாதன், கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் கோரிக்கை விடுத்து, இந்த பாதையை திறந்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, இந்த பாதையை திறக்க அமைச்சர் அனுமதி வழங்கினார். இதையடுத்து, புதர் மண்டி கிடந்த சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆனால் நேற்று மதியம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் ஒன்று திரண்டு, மருத்துவக் கல்லுாரிக்குள் சாலை அமைத்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல சுற்றுச்சுவரை உடைத்தால், மாணவர்களுக்கும், மாணவியருக்கும் போதிய பாதுகாப்பு இருக்காது.
மாணவர்களிடம் முன்கூட்டியே இந்த சாலை அமைப்பது குறித்து கருத்துகளை கேட்டறிந்து இருக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.