Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி

UPDATED : மே 08, 2024 12:00 AMADDED : மே 08, 2024 09:40 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், 96 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அடுத்த கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற முயற்சிகள் எடுக்கப்படும் எனகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட ஏழு ஒன்றியங்களில் மொத்தம், 96 பள்ளிகள் உள்ளன.

பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம், 36 மையங்களில் நடைபெற்றன. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் துவங்கப்பட்டது. தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது.

இந்நிலையில், நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கல்வி மாவட்டத்தில் மாணவர்கள், 3,284 பேர், மாணவியர், 3,998 என மொத்தம், 7,282 மாணவர்கள் தேர்வெழுதினர். அதில், மாணவர்கள், 3,073, மாணவியர், 3,888 என மொத்தம், 6,961 பேர் தேர்ச்சி பெற்றனர். 321 பேர் தேர்ச்சி பெறவில்லை. கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி, 96 சதவீதமாகும்.

கல்வி மாவட்ட அலுவலர் கேசவகுமார் கூறுகையில், கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டது.

பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வு செய்து, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் கல்வியாண்டில், கல்வி மாவட்டம், 100 சதவீதம் தேர்ச்சி பெற முயற்சிகள் எடுக்கப்படும், என்றார்.

பெற்றோர் ஆர்வம்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மொபைல்போனில் பார்வையிட்டதால், பள்ளிகளில் மாணவர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

தேர்வு முடிவுகள் தெரிந்த கையோடு, தங்களது பிள்ளைகளை அழைத்துச்சென்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கல்லுாரியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டினர். இதனால், கல்லுாரிகளில் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us