Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/90 மருந்துகள் தரமற்றவை சோதனையில் கண்டுபிடிப்பு

90 மருந்துகள் தரமற்றவை சோதனையில் கண்டுபிடிப்பு

90 மருந்துகள் தரமற்றவை சோதனையில் கண்டுபிடிப்பு

90 மருந்துகள் தரமற்றவை சோதனையில் கண்டுபிடிப்பு

UPDATED : டிச 18, 2024 12:00 AMADDED : டிச 18, 2024 05:57 PM


Google News
சென்னை: நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக, அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த மாதத்தில் மட்டும், 1,000க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், கிருமித்தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளி தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும், 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

அதன் விபரங்கள், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us