அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த 9 ஆயிரம் மாணவர்கள்

UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 09:27 AM

பொள்ளாச்சி:
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரம் மாணவர்கள், புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காலகட்டத்துக்குப் பின், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைத் தக்கவைக்கும் வகையில், 2024--25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை, மார்ச் 1ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த, 9 ஆயிரம் மாணவர்கள் புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், மாணவர் சேர்க்கை வழக்கத்தைவிட முன்னதாகவே இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை, அனைவரும் அறியும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது, பேனர் வைப்பது, விழிப்புணர்வுப் பேரணி நடத்துவது, வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனால், கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பில் மட்டும், 9 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்றார்.