Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரயில்வேயில் 7,951 பணியிடங்கள்; டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

ரயில்வேயில் 7,951 பணியிடங்கள்; டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

ரயில்வேயில் 7,951 பணியிடங்கள்; டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

ரயில்வேயில் 7,951 பணியிடங்கள்; டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

UPDATED : ஜூலை 30, 2024 12:00 AMADDED : ஜூலை 30, 2024 12:05 AM


Google News
டில்லி: நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக உள்ள 7,951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது போதிய அளவில் இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் ரயில்வே துறையில் சூப்பர்வைசர்கள், இன்ஜினியர்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணிடங்களுக்காக வேலை வாய்ப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.அதன் விவரம் வருமாறு:

மொத்த பணியிடங்கள் 7,951
ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள், சூப்பர்வைசர்கள், உதவியாளர்கள் என 7,934 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேற்பார்வையாளர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் என 13 காலியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித்தகுதி என்ன?
இளநிலை இன்ஜினியர் பணியிடத்துக்கு டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி., மற்றும் கணிப்பொறி பிரிவில் பி.ஜி.டி.சி.ஏ., பி.எஸ்.சி., (கம்யூட்டர் சயின்ஸ்), பி.சி.ஏ/பி.டெக்., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சூப்பர்வைசர் பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்
18 வயது முதல் 36 வயது உள்ளவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பட்டியலின பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊதியமாக தொடக்க காலத்தில் குறைந்த பட்சம் ரூ. 35,400 மற்றும் ரூ.44,900 என பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

காலக்கெடு
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக வரும் 30ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு http://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us