நீட் மறுதேர்வில் 750 பேர் ஆப்சென்ட்
நீட் மறுதேர்வில் 750 பேர் ஆப்சென்ட்
நீட் மறுதேர்வில் 750 பேர் ஆப்சென்ட்
UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM
ADDED : ஜூன் 24, 2024 10:39 AM

புதுடில்லி:
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, ஆறு தேர்வு மையங்களைச் சேர்ந்த 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது.
அந்த மாணவர்களுக்கு நேற்று மறுதேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவு 30ல் வெளியாகும். விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம் என தேசிய தேர்வு முகமை கூறியிருந்தது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 23) நடந்த நீட் மறுதேர்வில் 813 பேர் மட்டுமே பங்கேற்றனர்; 750 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதற்கிடையே, ஏற்கனவே நடந்த நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 63 மாணவர்களை, தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்துள்ளது. இதில் 17 பேர் பீஹாரையும், 30 பேர் குஜராத்தையும் சேர்ந்தவர்கள்.