7 மார்க் வினா கடினம்; சோதனை தந்த அறிவியல்

UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 10:26 AM

திருப்பூர்:
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 30 ஆயிரத்து, 169 மாணவர்கள் தேர்வெழுதினர். 451 பேர் பங்கேற்கவில்லை.
தனலட்சுமி:
ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் பெற முடியும். இதற்கு முன் கேட்கப்பட்ட, பாடங்களுக்கு பின்புறமிருந்த பகுதிகளே மீண்டும் வந்திருந்தது. ஏழு மதிப்பெண் பகுதியில் இப்படி, வினாக்கள் இடம் பெறுமென எதிர்பார்க்கவில்லை. கஷ்டமாக இருந்ததால், யோசித்து விடையெழுதினேன்.
அனுஷியா:
ஒரு மதிப்பெண், நான்கு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. முழுமையாக விடையளிக்க முடிந்தது. இரண்டு மதிப்பெண்ணில், இயற்பியல் பகுதியில் இருந்து கேள்வி எதிர்பார்த்தோம்; வேதியியலில் இருந்து கேள்வி வந்திருந்தது. ஏழு மதிப்பெண் வினா கடினமாக இருந்தது.
நிஷாந்த்:
ஏழு மதிப்பெண்ணில் புத்தகத்துக்குள் இருந்து ஒரு கேள்வியும், கடினமாக மற்றொரு கேள்வியும் இருந்தது. ஒரு மதிப்பெண், நான்கு மதிப்பெண் வினாக்களுக்கு முழுமையாக விடையளிக்க முடிந்தது. பாடங்களுக்கு பின்புறமிருந்து, திருப்புதல் தேர்வுகளில் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளும் வந்திருந்தன.
அஸ்வின்:
ஏழு மதிப்பெண் தவிர, மற்ற கேள்விகளுக்கு முழுமையாக விடை எழுதியிருப்பதால், நல்ல மதிப்பெண்களை பெற முடியும். இரண்டு மதிப்பெண்ணில் இரண்டு வினாவும், ஏழு மதிப்பெண்ணில் இரண்டு வினா பாடங்களுக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தது; அவற்றுக்கும் விடையளித்துள்ளேன்.
சென்டம் குறையும்
பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் வீரபத்திரன் (அறிவியல்) கூறுகையில், ஏழு மதிப்பெண் வினா எண், 33 மற்றும், 34 வேதியியல் பகுதியில், பாடங்களுக்குள் இருந்து யோசித்து விடையளிக்கும் வகையில் கேட்டதால், மெல்ல கற்கும் மாணவர்கள் எழுத சிரமப்பட்டிருப்பர். வழக்கமாக இயற்பியல் பகுதியில் இருந்து இவ்வினாக்கள் கேட்கப்படும்.
இம்முறை வேதியியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்டு விட்டது; இவற்றுக்கு முழுமையாக விடை எழுதியிருந்தால் மாணவர் மதிப்பெண் பெறுவர். நன்றாக படிக்கும் மாணவர், 75க்கு, 70க்கும் மேல் வாங்குவர்.
இரண்டு மற்றும் ஏழு மதிப்பெண்ணில் வினாக்கள் சிந்தித்து விடையளிக்கும் வகையில் இருந்தது. ஒரு மதிப்பெண், நான்கு மதிப்பெண் வினாக்களில் மதிப்பெண் பெறுவர்; தேர்ச்சி சதவீதம் பாதிக்காது. ஆனால், சென்டம் குறையலாம் என்றனர்.