இந்தியாவில் 58 சதவீதம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்: ஆய்வில் தகவல்

UPDATED : ஜூன் 19, 2024 12:00 AM
ADDED : ஜூன் 19, 2024 12:31 PM
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2018ல் 20.4 சதவீதமாக இருந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 2023ல் 58.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குளோபல் டேட்டா எனும் தரவு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, குளோபல் டேட்டா எனும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் பாரம்பரிய ரொக்கம் மற்றும் வங்கி பணப்பரிமாற்றத்துக்கு மாற்றாக இ-காமர்ஸ் எனும் மாற்று கட்டண முறை வேகமாக அதிகரித்து வருகிறது. யுபிஐ, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை பெற்று, அதற்கான கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்துவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் சீனா முன்னணியில் இருக்கிறது. சீனாவில் இ-காமர்ஸ் பரிவர்த்தனை கடந்த 2018ல் 53.4 சதவீதமாக இருந்த நிலையில், 2023ல் 65 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை 2018ல் இருந்து இ-காமர்ஸ் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் குறிப்பிடத்தக்க வகையில் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2018ல் 20.4 சதவீதமாக இருந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 2023ல் 58.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.