Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ ஏரோ மாடலிங் சயின்ஸ் பயிற்சியில் 5,000 பேர் பங்கேற்பு

ஏரோ மாடலிங் சயின்ஸ் பயிற்சியில் 5,000 பேர் பங்கேற்பு

ஏரோ மாடலிங் சயின்ஸ் பயிற்சியில் 5,000 பேர் பங்கேற்பு

ஏரோ மாடலிங் சயின்ஸ் பயிற்சியில் 5,000 பேர் பங்கேற்பு

UPDATED : மே 28, 2024 12:00 AMADDED : மே 28, 2024 11:20 AM


Google News
சென்னை:
அறிவியல், கணிதம், இன்ஜினியரிங், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், செய்முறையில் கற்றுத்தர வேண்டும், என சிட்டி பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் பிரேம் ஆனந்த் தெரிவித்தார்.
தினமலர் நாளிதழும், மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி பயிலரங்கம் நடத்தி வரும், சிட்டி பயிற்சி நிறுவனமும் இணைந்து, ஏரோ மாடலிங் சயின்ஸ் பயிற்சியை நடத்தின. இந்த பயிற்சி, ஆன்லைன் வாயிலாக காலை, 10:00 மணி முதல் மதியம், 12:30 வரை நடந்தது.
11,000 பேர்
அதில் பங்கேற்க, ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், 11,000 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். காலையில், 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பயிற்சி வகுப்பின் போது, சிட்டி பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் பிரேம் ஆனந்த், காகிதத்தைப் பயன்படுத்தி, விமானம் எப்படி மேலே பறக்கிறது, கீழே இறங்குகிறது போன்றவற்றை உள்ளடக்கிய விமான இயக்கம், விமான வடிவமைப்பின் அடிப்படை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக விரிவான முறையில் எடுத்துரைத்தார்.
அதை மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பார்த்து, தாங்களும் செய்து பார்த்தனர்.
பயிற்சியின் முடிவில், மாணவர்களுக்கு பயிற்சியில் கூறப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. அதில், வெற்றி பெற்ற ஐந்து பேருக்கு, 'சிட்டி' நிறுவனத்தின், எலக்ட்ரானிக் ஒர்க் ஷாப்பில் பங்கேற்க இலவச அனுமதி அளிக்கப்பட்டது. காலையில் பங்கேற்க முடியாதவர்களுக்காக, மாலை மீண்டும் பயிற்சி நடத்தப்பட்டது.

பிரேம் ஆனந்த் கூறியதாவது:
மாணவர்களுக்கு, ஏரோ மாடலிங் சயின்ஸ் உட்பட, எந்த ஒரு விஷயத்தையும் செய்முறையாக கற்று தரும்போது, எளிதில் புரிந்து விடும். அதை மறக்க மாட்டார்கள்.
பாடத்திட்டம்
சாதாரண காகிதத்தை வைத்து, விமானம் இயக்கம், வடிவமைப்பு தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. இதற்கு, பெரிய ஆய்வகத்திற்கு செல்லத் தேவையில்லை.
காகிதத்தில் நடத்தப்பட்ட ஏரோ மாடலிங் சயின்ஸ் பயிற்சி வகுப்பை, மாணவர்கள் எந்த காலத்திலும் மறக்க மாட்டார்கள். என்றைக்கும் அவர்களுக்கு நினைவிருக்கும். அறிவியல், கணிதம், இன்ஜினியரிங், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், செய்முறையில் கற்றுத்தர வேண்டும்.
வருங்காலத்திற்கு தேவைப்படும் திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பாடத்திட்டங்களை தான், குழந்தைகள் இன்று படிக்கின்றனர்.
ஆனால், இன்று தொழில்நுட்பங்கள் அதிவேகமாக வளர்ந்து விட்டன. தகவல் பரிமாற கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், இன்று மொபைல் போனில், வீடியோ காலில் பேசுகிறோம்.
வருங்கால தேவை
ஏரோ மாடலிங் சயின்ஸ், ராக்கெட்டை உள்ளடக்கிய விண்வெளி, ரோபோடிக்ஸ், ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என, வருங்காலத்திற்கு தேவையான பாடங்களை, இன்று பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட, நம் மாணவர்களுக்கு வருங்காலத்திற்கு தேவைப்படும் திறன்களை கற்றுத்தர வேண்டும்; ஏரோ மாடலிங் சயின்சை பள்ளியில் கற்றுத்தர மாட்டார்கள்.
இதை சிட்டி நிறுவனம், மாணவர்களுக்கு கற்று தருகிறது. இதுபோன்ற பயிற்சிகளில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தி, குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
ஏரோ மாடலிங் சயின்ஸ் பயிற்சிக்கான ஆன்லைன் நிகழ்ச்சியில், ஒரே நாளில் 5,000 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இது, சாதாரண விஷயம் அல்ல. ஆன்லைனில் ஒரு புரட்சி.
அதில், மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us