குரூப் 2 தேர்வில் 42 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்

UPDATED : செப் 11, 2024 12:00 AM
ADDED : செப் 11, 2024 08:36 AM
மதுரை:
அரசு துறைகளில் 2327 பணியிடங்களை நிரப்ப மதுரை மாவட்டத்தில் செப்.14ம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வு 146 மையங்களில் நடக்கிறது. 42 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு, பஸ்வசதி, தேர்வு நாளில் மின்தடையின்றி இருப்பது, மருத்துவ, தீயணைப்பு குழுவினர் தயாராக இருப்பது உட்பட தேவையான வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
தேர்வு ஏற்பாடுகளை கவனிக்க 5 துணை கலெக்டர்கள், 40க்கும் மேற்பட்ட தாசில்தார்கள், 146க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹால்டிக்கெட்டை தேர்வாளர்கள் www.tnpsc.gov.inல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.