Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள்

உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள்

உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள்

உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள்

UPDATED : ஜூன் 17, 2024 12:00 AMADDED : ஜூன் 17, 2024 11:52 AM


Google News
புதுடில்லி:
உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது:


உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் இந்திய ஐ.டி., நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் இடம் பிடித்துள்ளது. தொழில் நுட்ப ஜாம்பவங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் பட்டியலில் டெலிகாம் நிறுவனமான ஏர்டெல்லும் இடம் பிடித்துள்ளது.

மேலும் டிசிஎஸ் 46-வது இடத்தையும், எச்.டி.எப்.சி., வங்கி 47-வது இடத்தையும், ஏர்டெல் 73-வது இடம், இன்போசிஸ் 74 -வது இடத்தையும் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் கூகுள், மைக்ரோசாப்ட், மற்றும் அமேசான் உள்ளிட்டவை முதல் ஐந்து இடங்களில் உள்ளது. முதல்10 இடங்களில் 8 இடங்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us