3 நாட்கள் ரயில் கண்காட்சி துவக்கம்
3 நாட்கள் ரயில் கண்காட்சி துவக்கம்
3 நாட்கள் ரயில் கண்காட்சி துவக்கம்
UPDATED : ஏப் 19, 2024 12:00 AM
ADDED : ஏப் 19, 2024 10:38 AM
சென்னை:
உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மூன்று நாட்கள் ரயில் கண்காட்சி, சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ரயில் மியூசியத்தில் நேற்று துவங்கியது.
உலக பாரம்பரிய தினத்தையொட்டி, ரயில்வேயின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில், இந்த சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ரயில் தன்னார்வலர்கள், மாணவர்கள் சார்பில் வடிவமைக்கப்பட்ட 10 சிறிய வகை ஓடும் ரயில்கள், ஏழு ரயில் மாதிரிகள், பாரம்பரிய இந்திய ரயில் மாதிரி பெட்டிகள், இன்ஜின்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.
நேற்று துவங்கிய இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள், ரயில் ஆர்வலர்கள் ஆர்வமாக பங்கேற்று, போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இந்த கண்காட்சிக்கு, இன்று விடுமுறை. வரும் 20, 21ம் தேதி வரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. நுழைவு கட்டணமாக ஒருவருக்கு, 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.