Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2024 மிகவும் வெப்பமான ஆண்டு: ஆய்வில் தகவல்

2024 மிகவும் வெப்பமான ஆண்டு: ஆய்வில் தகவல்

2024 மிகவும் வெப்பமான ஆண்டு: ஆய்வில் தகவல்

2024 மிகவும் வெப்பமான ஆண்டு: ஆய்வில் தகவல்

UPDATED : பிப் 27, 2025 12:00 AMADDED : பிப் 27, 2025 08:08 PM


Google News
Latest Tamil News
ராஜஸ்தான்:
கடந்த 2024ம் ஆண்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது எனவும் அதே சமயம் திட்டமிடப்படாத சுற்றுச்சூழல் மேலாண்மையால் மிக வெப்பமான ஆண்டாக பதிவாகி உள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) இயக்குநர் ஜெனரல் சுனிதா நரேன் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு பிரச்சனைகள் குறித்து வருடாந்திர மாநாடு ராஜஸ்தானின் நிம்லியில் அமைந்துள்ள அனில் அகர்வால் சுற்றுச்சூழல் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 80 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

நரேன் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய சுற்றுச்சூழல் அறிக்கையை இந்தியாவின் G20 ஷெர்பா அமிதாப் காந்த், திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா மற்றும் மேலாண்மை மற்றும் நிதி குரு ராஜ் லிபர்ஹான் ஆகியோருடன் இணைந்து வெளியிட்டார்.

இந்தியாவில் 2023ம் ஆண்டைவிட 2024ம் ஆண்டு 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலை கொண்ட ஆண்டாக பதிவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

சிஎஸ்இ-ன் சுற்றுச்சூழல் வளங்கள் திட்ட இயக்குனர் கிரண் பாண்டே கூறுகையில், உலகளாவிய சராசரி வெப்பநிலையில் ஒவ்வொரு ஒரு டிகிரி உயர்வுக்கும் வளிமண்டல ஈரப்பதம் 7 சதவீதம் உயர்கிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 274 நாட்களில் 255 நாட்கள் இந்தியா தீவிரமான வானிலை மாற்றங்களை கொண்டதாக இருந்தது. 2023 இல் இதே காலகட்டத்தில் 235 நாட்களும், 2022 இல் 241 நாட்களும் கடுமையான வானிலை நிகழ்வுகளைக் கண்டன. இந்த நிகழ்வுகள் விவசாயத்தை கடுமையாக பாதித்தன. 2024 இல் 3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர் நிலம் பாதிக்கப்பட்டது. இது 2022 ஐ விட 74 சதவீதம் அதிகம், என்றார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us