விடைத்தாள் திருத்தும் பணி 18, 19ல் ஆசிரியர்களுக்கு விலக்கு

UPDATED : ஏப் 16, 2024 12:00 AM
ADDED : ஏப் 16, 2024 10:55 AM

திருப்பூர்:
கடந்த 6ம் தேதி பிளஸ் 1; கடந்த 12ம் தேதி பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. இப்பணிகள் இம்மாத கடைசி வாரம் வரை நடக்கவுள்ளது. இப்பணியில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரும், 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், 18ம் தேதி ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தப்படுகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, 18ம் தேதி காலை பணியாணை வழங்கப்பட உள்ளது. இதை பெற்று 18ம் தேதி இரவே, ஓட்டுச்சாவடிக்கு சென்று விடுவர்.
19ம் தேதி முழுமையாக தேர்தல் பணியில் ஈடுபடுவர்.தேர்தல் பணியையொட்டி, ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட உள்ளது. வரும் 20 அல்லது, 22ம் தேதியில் இருந்து மீண்டும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை தொடர உள்ளனர்.