Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 171 சீட்டுகள் காலி: சென்டாக்கில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதிர்ஷ்டம்

171 சீட்டுகள் காலி: சென்டாக்கில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதிர்ஷ்டம்

171 சீட்டுகள் காலி: சென்டாக்கில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதிர்ஷ்டம்

171 சீட்டுகள் காலி: சென்டாக்கில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதிர்ஷ்டம்

UPDATED : செப் 10, 2024 12:00 AMADDED : செப் 10, 2024 08:53 AM


Google News
புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஜோஸா சுய நிதி இடங்களில் பாதி இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. 171 இடங்கள் காலியாக உள்ளன. இந்த சீட்டுகள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது.

இந்திய அளவில் சிறந்த இன்ஜினியரிங் கல்லுாரியாக உள்ள புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி, அண்மையில் தொழில்நுட்ப பல்கலைக் கழகமாக தரம் உயர்ந்துள்ளது. இங்குள்ள பி.டெக்., படிப்புகளில் சேர ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.

சிறிய தசம மதிப்பெண் வித்தியாசத்தில் கூட இங்கு படிக்கும் வாய்ப்பினை இழந்து விடுகின்றனர். இப்படி இடம் கிடைக்காத மாணவர்களும் இங்கு படிக்க மற்றொரு வழி உள்ளது. ஆனால் கொஞ்சம் பணம் கட்டி படிக்க வேண்டி இருக்கும். அவ்வளவு தான். இதன் மூலம் இங்குள்ள, 317 சுய நிதி இடங்களில் ஆண்டிற்கு 1.5 லட்சம் சேர்ந்து விரும்பிய அதே பி.டெக்., படிப்பினை தேர்வு செய்து படிக்கலாம். ஆனால் விண்ணப்பிக்க ஒரே கண்டிஷன் ஜே.இ.இ., தேர்வு எழுதி இருக்க வேண்டும். சென்டாக் மூலம் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

கடந்தாண்டு நிரம்பாத 112 ஜோஸா சீட்டுகள் சென்டாக்கிடம் ஒப்படைக்கப்பட்டன. இதிலும் மாணவர்கள் ஆர்வமாக சேர்ந்தனர்.

இந்தாண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 317 பி.டெக்., சீட்டுகளில் 171 சீட்டுகள் மட்டுமே நிரம்பியுள்ளது. 146 சீட்டுகள் காலியாக உள்ளன. இந்த சீட்டுகளை நிரப்ப இப்போது சென்டாக்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டும் கம்ப்யூட்டர் சயின்ஸ்க்குதான் மவுசு! இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் 55 சதவீதம் இடங்கள் நிரம்பின. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பி.டெக்., இன்ஜினியரிங் சீட்டு தான் முக்கியம் என்று குறி வைத்த மாணவர்கள், அரசு ஒதுக்கீட்டிற்கு மட்டுமின்றி இப்போதே, ஜோஸா காலியிடங்களுக்கும் சேர்த்தே விண்ணப்பித்து இருந்தனர்.

இதனால் சிறந்த புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எளிதாக சீட் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜோஸா மூலம் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் முதலில் சென்டாக் மூலம் ஜே.இ.இ., ஸ்கோர் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து நிரப்பப்படும். அதில் காலியிடங்கள் இருந்தால் அதன் பிறகு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கை நடக்க உள்ளது.

இன்றுக்குள் முன்னுரிமை


ஜோஸா காலியிடங்களை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சூழ்நிலையில் சென்டாக் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் இந்த இடங்களை நிரப்பப்பட உள்ளது.

எனவே சென்டாக்கில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுடன் ஜோஸா இடங்களுக்கு சேர்த்து விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் டேஸ்போடு வழியாக இன்று 9ம் தேதி மதியம் 2:00 மணிக்குள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.

காலியிட விவரம்


புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மொத்தம் 9 பி.டெக். படிப்புகள் உள்ளன. இதில் என்.ஆர்ஐ., பிரிவில் 25 சீட்டுகள் உள்ளன. ஜோஸா பிரிவில் 146 சீட்டுகள் காலியாக உள்ளன. ஒட்டுமொத்தமாக சிவில்-45, மெக்கானிக்கல்-39, இ.சி.இ.,-25, கம்ப்யூட்டர் சயின்ஸ்---23, இ.இ.இ.,-7, இ அண்ட் ஐ., 6, ஐ.டி.,-5, கெமிக்கல்--8, மெக்கட்ரானிக்ஸ்-13 என 171 ஜோஸா சீட்டுகள் காலியாக உள்ளன.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us