Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ நிலவில் 160 கி.மீ., பள்ளம்; கண்டுபிடித்தது பிரக்ஞான் ரோவர்

நிலவில் 160 கி.மீ., பள்ளம்; கண்டுபிடித்தது பிரக்ஞான் ரோவர்

நிலவில் 160 கி.மீ., பள்ளம்; கண்டுபிடித்தது பிரக்ஞான் ரோவர்

நிலவில் 160 கி.மீ., பள்ளம்; கண்டுபிடித்தது பிரக்ஞான் ரோவர்

UPDATED : செப் 23, 2024 12:00 AMADDED : செப் 23, 2024 04:46 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:
நிலவில் 160 கி.மீ., அகலமுள்ள பள்ளம் இருப்பதை, சந்திரயானின் பிரக்ஞான் ரோவர் கண்டுபிடித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய, சந்திரயான் - 3 விண்கலத்தின், விக்ரம் லேண்டர் கலன், நிலவின் தென் துருவத்தில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தரை இறங்கியது.

மொத்தம் 26 கிலோ எடையுடன் ஆறு சக்கரங்களை உடைய, பிரக்ஞான் ரோவர் கலன் ரிமோட் கார் போல அங்கும், இங்கும் வலம் வந்து ஆய்வு மேற்கொண்டது. இதன் வாயிலாக, சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, நிலவில் தடம் பதித்த நான்காவது நாடானது இந்தியா.

ரோவர் மூலம் பெறப்பட்ட படங்கள், தகவல்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ., அகலமுள்ள பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தகவலை ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர்.

ரோவர் 350 கிலோமீட்டர் தொலைவில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்த போது தான், பள்ளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தி உள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us