10ம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு 146 பள்ளிகளில் சிறப்பு பயிற்சி துவக்கம்

UPDATED : மே 20, 2024 12:00 AM
ADDED : மே 20, 2024 09:23 AM
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில், 10ம் வகுப்பில் தோல்வியுற்ற, 146 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு உடனடி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 24,826 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 23,605 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 95.08 சதவீத தேர்ச்சியாகும். இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 189 அரசு பள்ளிகளை சேர்ந்த, 13,124 பேர் தேர்வு எழுதியதில், 12,123 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி, 92.37 சதவீதமாகும். மொத்தமுள்ள, 189 அரசு பள்ளிகளில், 43 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
100 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறாத, 146 பள்ளிகளில் தோல்வியுற்ற மாணவ, மாணவிகளை அடுத்த மாதம் நடக்க உள்ள உடனடி தேர்வில் பங்கேற்க, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தோல்வியுற்ற மாணவர்களுக்கு, 146 பள்ளிகளில் நேற்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளது. இதில், தோல்வியுற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டும். எந்தெந்த பாடங்களில் தோல்வியுற்றுள்ளார்களே, அப்பாட ஆசிரியர்கள், மாணவர்களின் வருகையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவும், முழுமையான பயிற்சிகளை வழங்கி, உடனடி தேர்வில் தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ள, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.