அரசு கல்லுாரியில் வரும் 12 முதல் 14 வரை முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

UPDATED : ஜூன் 04, 2024 12:00 AM
ADDED : ஜூன் 04, 2024 10:51 AM
ஆத்துார்:
ஆத்துார் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் வரும் 12 முதல் 14 வரை முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஆத்துார் அருகே வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சுமதி அறிக்கை:
ஆத்துார் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 2024 - 25ம் கல்வியாண்டுக்கு இளம் அறிவியல், இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு முதல்கட்ட சுற்று முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன், 12 முதல், 14 வரை, காலை, 9:00 மணி முதல் நடக்க உள்ளது.
இதில் பங்கேற்கும் மாணவர்கள், உண்மை சான்றிதழ், நகல் 3 பிரதிகள், புகைப்படம் 5 கொண்டுவர வேண்டும். மாணவர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி, மாற்றுச்சான்றிதழ், இணையதளத்தில் விண்ணப்பம் செய்த படிவம், ஆதார், மாணவர்களது வங்கி கணக்கு புத்தகம், புகைப்படத்தை கொண்டு வரவேண்டும்.
சேர்க்கை கட்டணத்தை அதே நாளில் கல்லுாரி அலுவலகத்தில் கட்ட வேண்டும். கலந்தாய்வுக்கு பெற்றோருடன் வரவேண்டும். தகவலுக்கு, www.aagacattur.org.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் காலி இடங்களுக்கான முதல் கட்ட, இரண்டாம் சுற்று மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தரவரிசை அடிப்படையில் அழைக்கப்படும். மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். காலி இடங்களுக்கு தரவரிசை, இன சுழற்சி அடிப்படையில் மட்டும் சேர்க்கை வழங்கப்படும்.