எங்கே செல்லும் இந்த பாதை: வகுப்பறையில் மது குடித்த மாணவியர்!

UPDATED : செப் 11, 2024 12:00 AM
ADDED : செப் 11, 2024 07:06 PM
ராய்ப்பூர்:
அரசு பள்ளி வகுப்பறையில் மாணவிகள் மது குடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் பட்சவுரா என்ற கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படித்த பள்ளி மாணவிகள், வகுப்பறையில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அவர்கள் கடந்த ஜூலை 29ம் தேதி மது குடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக துவங்கியது.
இது மாவட்ட கல்வி அதிகாரி(டிஇஓ)யின் கவனத்திற்கு வந்தது. சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தார். சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பெற்ற குழுவினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
டிஇஓ கூறுகையில், நாங்கள் மது குடிக்கவில்லை. விளையாட்டாக பாட்டிலை கைகளில் பிடித்து வீடியோ பதிவு செய்ததாக தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது என்றார்.
பள்ளியை சேர்ந்த சிலர் கூறியதாவது:
சம்பவம் நடந்த 29ம் தேதியன்று மாணவி ஒருவரின் பிறந்த நாள். அதை வகுப்பறையில் கொண்டாடிய மாணவிகள், மது குடித்து அதை வீடியோ பதிவு செய்துள்ளனர். அங்கிருந்த மாணவிகளில் ஒருவர் தான், வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.