கல்லுாரிக்கு செல்லும் முதல் கம்மாபட்டி பெண்

UPDATED : ஜூன் 06, 2024 12:00 AM
ADDED : ஜூன் 06, 2024 09:57 AM

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கம்மாபட்டி என்ற கிராமத்தில் இருந்து கல்லுாரிக்கு செல்லும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார், அக்கிராமத்தை சேர்ந்த சங்கீதா.
ராஜபாளையம் அருகே கம்மாபட்டி என்ற கிராமத்தில், பெண்கள் 10ம் வகுப்புக்கு மேல் தாண்டியது கிடையாது. நீண்ட கால சவாலுக்கு பின்னரே, பெண்கள் பிளஸ் 1, 2 பயில்கின்றனர். இவர்களில் சங்கீதா என்ற மாணவி, கம்மாபட்டியின் பக்கத்து ஊரான சத்திரப்பட்டி மகளிர் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 முடித்து, 460 மதிப்பெண்கள் பெற்றார்.
அத்துடன் நின்று விடாமல் தற்போது, இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர ஆயத்தமாகி வருகிறார். கம்மாபட்டி அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், சமூக ஆர்வலர் மாரியப்பன், சங்கீதாவின் உறவினரான முதல் முறை பிளஸ் 2 படித்த சஞ்சீவி ஆகியோர், இவருக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.
சங்கீதாவை கலெக்டர் ஜெயசீலன் நேரில் அழைத்து பாராட்டினார்.
பின், நிருபர்களை சந்தித்த சங்கீதா கூறியதாவது:
என் ஊரில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சைக்கிளிலும், பஸ்சிலும் போய் படிப்பேன். உயர்கல்விக்கு செல்லும் என் விருப்பம் நிறைவேறி உள்ளது. நான் இன்ஜினியரிங் படிக்க உள்ளேன். எங்கள் ஊரில் பிற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.