Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டாடா இன்ஸ்ட்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்

டாடா இன்ஸ்ட்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்

டாடா இன்ஸ்ட்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்

டாடா இன்ஸ்ட்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்

அக் 30, 2023 12:00 AMஅக் 30, 2023 12:00 AM


Google News
இந்திய அணு சக்தி துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனம், டாடா இன்ஸ்ட்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்
முக்கியத்துவம்:டாக்டர் ஹோமி பாபாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சர் தொராப்ஜி டாடா அறக்கட்டளையின் கீழ் 1945ம் ஆண்டு இந்நிறுவனம் துவக்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்நிறுவனத்திற்கு புனே, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் கிளை மையங்கள் உள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளையும் வழங்குகிறது.
கிளை மையங்கள்:* சென்டர் பார் அப்ளிகபில் மேத்மெடிக்ஸ் - பெங்களூரு* ஹோமி பாபா சென்டர் பார் சயின்ஸ் எஜுகேஷன் - மும்பை* இன்டர்நேஷனல் சென்டர் பார் தியரடிக்கல் சயின்சஸ் - பெங்களூரு* நேஷனல் சென்டர் பார் ரேடியோ அஸ்ட்ரோபிசிக்ஸ், புனே* நேஷனல் சென்டர் பார் பயோலஜிக்கல் சயின்சஸ் - பெங்களூரு* டி.ஐ.எப்.ஆர்., சென்டர் பார் இன்டர்டிசிப்ளினரி சயின்சஸ், ஐதராபாத் 
வழங்கப்படும் படிப்புகள்:பிஎச்.டி.,: பயோலஜி, கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் அண்டு சிஸ்டம்ஸ் சயின்சஸ், மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ், பிசிக்ஸ் ஆப் லைப் அண்டு சயின்ஸ் எஜுகேஷன்ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., -பிஎச்.டி.,: பயோலஜி, கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் அண்டு சிஸ்டம்ஸ் சயின்சஸ், மேத்மெடிக்ஸ் அண்டு பிசிக்ஸ்
உதவித்தொகை:கிளை மையங்களில், அந்தந்த துறை சார்ந்த முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் உதவித்தொகையுடன் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, பெங்களூருவில் உள்ள சென்டர் பார் அப்ளிகபில் மேத்மெடிக்ஸ் நிறுவனத்தில், மாதம் 35 ஆயிரம் ரூபாய் வரையில் உதவித்தொகையுடன் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.,-பிஎச்.டி., படிப்பு வழங்கப்படுகிறது. 
முதலாம் ஆண்டில் மாதம் 21 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் ஆண்டில் மாதம் 31 ஆயிரம் ரூபாயும், அதன்பிறகு, மாதம் 35 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவைதவிர, முதலாம் ஆண்டில் 25 ஆயிரம் ரூபாய் ஆண்டு ஊக்கத்தொகையும், இரண்டாம் ஆண்டில் இருந்து ஆறாம் ஆண்டு வரை 40 ஆயிரம் ரூபாயும் ஆண்டு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. ஏழாம் ஆண்டில் மாதம் 17 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
தகுதிகள்:துறை சார்ந்த பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், டி.ஐ.எப்.ஆர்., நிறுவனத்தால் நடத்தப்படும் பிரத்யேக நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 
விபரங்களுக்கு: www.tifr.res.in






      Our Apps Available On




      Dinamalar

      Follow us