Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை

காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை

காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை

காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை

செப் 29, 2023 12:00 AMசெப் 29, 2023 12:00 AM


Google News
காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை - 2024 திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள இந்திய மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், யு.கே., கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை இலவசமாக மேற்கொள்ள முடியும். யு.கே.,வின் காம்ன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் வழங்கும் இந்த திட்டம், செப்டம்பர் / அக்டோபர் 2024 முதம் துவங்கும் படிப்புகளுக்கு பொருந்தும்.
தகுதியுள்ள கருப்பொருள்கள்:* வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்* சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல்* உலகளாவிய செழிப்பை ஊக்குவித்தல்* உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல்* திறனை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளை சமாளித்தல்* அணுகல், சேர்த்தல் மற்றும் வாய்ப்புகள்
தகுதிகள்:* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.* இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.* யு.கே., கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள உரிய தகுதி பெற்றவராக இருப்பதுடன்,செப்டம்பர்/அக்டோபர் 2024 சேர்க்கை பெற தயாராக இருக்க வேண்டும்.* செப்டம்பர் 2023க்குள், குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.* இரண்டாவது யு.கே., முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு சி.எஸ்.சி., நிதி அளிப்பதில்லை. எனினும், அதன் அவசியம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அவை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் நிதி உதவி அளிக்கப்படலாம். * எம்.பி.ஏ., படிப்பிற்கு நிதி உதவி அளிக்கப்படுவதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் https://fs29.formsite.com/m3nCYq/omxnv2g3ix/index எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பபதோடு, இந்திய கல்வி அமைச்சகத்தின் https://proposal.sakshat.ac.in/scholarship/ எனும் 'சாக்சாத்’ இணையதளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: www.education.gov.in






      Our Apps Available On




      Dinamalar

      Follow us