அரசு மருத்துவமனைகள் மீது 'வாட்ஸாப்'பில் புகாரளிக்கலாம்
அரசு மருத்துவமனைகள் மீது 'வாட்ஸாப்'பில் புகாரளிக்கலாம்
அரசு மருத்துவமனைகள் மீது 'வாட்ஸாப்'பில் புகாரளிக்கலாம்
ADDED : ஜூன் 03, 2025 03:40 AM
பெங்களூரு: கர்நாடகாவில், அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை குறைபாடு குறித்து, 'வாட்ஸாப்' வாயிலாக புகார் அளிக்கலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, கர்நாடக மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட அறிக்கை:
அரசு மருத்துவமனைகள் தொடர்பான எந்த ஒரு புகாரையும், 94498 43001 என்ற வாட்ஸாப் எண் வாயிலாக அளிக்கலாம். இதில், முறையாக மருத்துவம் அளிக்கப்படாதது; மரியாதை குறைவாக நடத்தப்படுவது போன்றவை குறித்து புகார் அளிக்கலாம். தேவைப்பட்டால், புகார்கள் தொடர்பான வீடியோ, புகைப்படங்களையும் பதிவேற்றலாம்.
புகார் அளிப்பவர் குறித்த விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். வாட்ஸாப் வழியாக புகார்கள் மட்டும் அளிக்க முடியுமே தவிர அழைப்புகள் அனுமதியில்லை. நோயாளிகளின் உறவினர்கள், உதவியாளர்கள், பொது மக்கள் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.