குறைய துவங்கியது யமுனை நீர்மட்டம் படகு சவாரி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
குறைய துவங்கியது யமுனை நீர்மட்டம் படகு சவாரி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
குறைய துவங்கியது யமுனை நீர்மட்டம் படகு சவாரி செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

ஆண் உடல் மீட்பு
வடகிழக்கு டில்லி கர்ஹி மெந்து கிராமத்தில் வசித்த ஓம்பீர்,50, புஸ்தா சாலையில், 3ம் தேதி காலை 8:30 மணிக்கு தன் வீட்டை விட்டு வெளியேறி வெள்ளத்தில் நடந்து சென்றார். அதன் பின் அவரைக் காணவில்லை.
சுவர் இடிந்து ஒருவர் காயம்
தெற்கு டில்லி கிரேட்டர் கைலாஷில், டாடா டெலிகாம் மற்றும் வனத்துறை ஆகியவற்றால் பராமரிக்கப்பட்டு வந்த 35 அடி நீள சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. இடிபாட்டில் சிக்கி காயம் அடைந்த, மனோஜ் என்பவர், எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுவர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, ஐந்து வாகனங்கள் சேதம் அடைந்தன.
கொசுக்கடியில் அவதி
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தினமும் லாரிகளில் உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது. குழந்தைகள் உட்பட அனைவரும் நீண்ட வரிசையில் நின்று உணவு பெற்றுக் கொள்கின்றனர்.
பஞ்சாபில் குறையுது மழை
கனமழை மற்றும் வெள் ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்திலும் மழை லேசாக குறையத் துவங்கி யுள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் லூதியானா 0.98 செ.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது.
கரை உடையும் அபாயம்
சட்லஜ் நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, கரை பலவீனம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.