பல் வலி சரியாக சல்பாஸ் மாத்திரை சாப்பிட்ட பெண் பலி
பல் வலி சரியாக சல்பாஸ் மாத்திரை சாப்பிட்ட பெண் பலி
பல் வலி சரியாக சல்பாஸ் மாத்திரை சாப்பிட்ட பெண் பலி
ADDED : மே 18, 2025 12:43 AM
ஜாபூவா: மத்திய பிரதேசத்தின் ஜாபூவா மாவட்டத்தில் உள்ள தரம்புரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா, 32. இவர், பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். மருந்து கடையில் சமீபத்தில் மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட ரேகா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விசாரணையில், பல் வலிக்கு அவர் சல்பாஸ் எனப்படும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மாத்திரையை, வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மருந்தக உரிமையாளரை போலீசார் நேற்று கைது செய்தனர். அதை விற்ற கடை ஊழியரை தேடி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட சல்பாஸ் மாத்திரை, மருந்து கடையில் வைத்திருந்தது குறித்து மருந்து கட்டுப்பாடு துறை விசாரிக்கிறது.