2 வயது மகனை கால்வாயில் வீசி கொன்ற பெண் கைது
2 வயது மகனை கால்வாயில் வீசி கொன்ற பெண் கைது
2 வயது மகனை கால்வாயில் வீசி கொன்ற பெண் கைது
ADDED : மே 14, 2025 06:29 PM
பரிதாபாத்:உத்தர பிரதேசத்தில், போலி மந்திரவாதி ஆலோசனைப்படி, இரண்டு வயது மகனை கால்வாயில் வீசிய பெண் மற்றும் போலி பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டனர்.
உ.பி., மாநிலம் பரிதாபாத் சைனிக் காலனியில் வசிப்பவர் மேகா. இவர், மேற்கு வங்க மாநிலம் பகத்பூரைச் சேர்ந்த தற்போது சைனிக் காலனியில் வசிக்கும் மிதா பாட்டியா என்ற போலி பெண் மந்திரவாதியை அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுவார்.
சமீபத்தில், மிதா பாட்டியாவை மேகா சந்தித்தார். அப்போது, மேகாவின் இரண்டு வயது மகன் சாத்தானின் குழந்தை எனக் கூறிய பாட்டியா, அந்தக் குழந்தை குடும்பத்தையே அழித்து விடும் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, தன் இரண்டு வயது மகனை தூக்கிச் சென்ற மேகா, ஆக்ரா கால்வாயில் வீசினார். தகவல் அறிந்த போலீசார், மேகா மற்றும் மிதா பாட்டியா இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆக்ரா கால்வாயில் இருந்து குழந்தை உடல் மீட்க-ப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்குப் பின், தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.