தாலி கட்டிட்டா வேலை போயிடுமா? பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம்
தாலி கட்டிட்டா வேலை போயிடுமா? பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம்
தாலி கட்டிட்டா வேலை போயிடுமா? பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம்
UPDATED : ஜூன் 27, 2024 01:57 PM
ADDED : ஜூன் 27, 2024 01:44 PM

புதுடில்லி: திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்துள்ள பாக்ஸ்கான் நிறுவனம், ‛‛ சமீபத்தில் வேலைக்கு எடுத்தவர்களில் 25 சதவீதம் பேர் திருமணம் ஆனவர்கள். பாதுகாப்பு கருதி, பாலினம் மற்றும் மதம் பார்க்காமல் அனைத்து பணியாளர்களும் தங்கம் உள்ளிட்ட எந்த உலோக பொருட்களையும் அணிவதை தவிர்க்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது '' எனக்கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆலை இயங்கி வருகிறது. இங்கு திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என புகார் எழுந்தது. இது குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் உள்ளதாக வெளியான தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் திருமணம் ஆனவர்கள். பாதுகாப்பு கருதி, பாலினம் மற்றும் மதம் பார்க்காமல் அனைத்து பணியாளர்களும் தங்கம் உள்ளிட்ட எந்த உலோக பொருட்களையும் அணிவதை தவிர்க்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது.
திருமணம் ஆன பெண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்ற நிபந்தனை எங்களின் கொள்கையே கிடையாது. வேலைக்கு தேர்வு ஆகாத சிலர் இது போன்ற குற்றச்சாட்டை கிளப்பி விட்டுள்ளனர். இது போன்ற பொய் குற்றச்சாட்டு நிறுவனத்தை பாதிக்கும். இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.