பா.ஜ.,விற்கு தனி மெஜாரிட்டி கிடைக்குமா?
பா.ஜ.,விற்கு தனி மெஜாரிட்டி கிடைக்குமா?
பா.ஜ.,விற்கு தனி மெஜாரிட்டி கிடைக்குமா?
ADDED : ஜூன் 04, 2024 10:46 AM

சென்னை: லோக்சபாவில் பா.ஜ.,விற்கு தனி மெஜாரிட்டி கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஒரு கட்சி 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், 441 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 11 மணி நிலவரப்படி தனித்து 246 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் பா.ஜ., கூட்டணி 310 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
இதன்படி, தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளது என்ற போதிலும், பா.ஜ., கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் சிறிது நேரம் பொறுத்திருக்க வேண்டும்.
கடந்த 2014ல் பா.ஜ., 282 தொகுதிகளிலும், 2019 ல் 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது.