லோக்சபா சபாநாயகர் யார் ?: 24-ல் கூடுகிறது பார்லிமென்ட் சிறப்பு கூட்டம்
லோக்சபா சபாநாயகர் யார் ?: 24-ல் கூடுகிறது பார்லிமென்ட் சிறப்பு கூட்டம்
லோக்சபா சபாநாயகர் யார் ?: 24-ல் கூடுகிறது பார்லிமென்ட் சிறப்பு கூட்டம்
ADDED : ஜூன் 11, 2024 08:16 PM

புதுடில்லி: பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி முதல் 8 நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. ஆட்சி மீண்டும் தக்க வைத்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி மூன்றாம் முறையாக கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். தொடர்ந்து 71 அமைச்சர்களுக்கான இலாக்கா ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் பாராளுமன்ற புதிய லோக்சபா சபாநாயகரை தேர்வு செய்வதற்காக வரும் 24-ம் தேதி சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்குகிறது. 26-ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடியின் கூட்டணி அரசில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியும் முக்கிய அங்கம் வகிக்கிறது. லோக்சபா சபாநாயகர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்பதால் இரு கட்சி தலைவர்களும் ‛‛லோக்சபா சபாநாயகர்'' பதவியை தங்களுக்கு ஒதுக்கிட வலியுறுத்தி மோடிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.