நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம்
நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம்
நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம்

வாக்குறுதிகள்
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பீஹார் வந்திருந்த போது பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு பீஹாருக்கு வந்திருக்கிறேன்.
சில நிமிடங்களில்...!
பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தை தூள் தூளாக்குவதன் மூலம் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளது. சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே இந்தியாவின் பலம்.
ஆபரேஷன் சிந்தூர் தொடரும்
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் போதெல்லாம், ஆபரேஷன்சிந்தூர் தொடரும். பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும். சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் வலிமையை எதிரிகள் கண்டிருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் நிறுத்தப்படவில்லை. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால், இந்தியா ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நிறைய செஞ்சு இருக்கோம்!
நிகழ்ச்சியில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது: பீஹாரில் நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைவதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசு எந்த வேலையும் செய்யவில்லை. முந்தைய அரசு பெண்களுக்கு ஏதாவது செய்ததா? பெண்களுக்காக நாங்கள் நிறைய வேலை செய்துள்ளோம்.