ADDED : ஜூன் 03, 2024 11:01 PM

லோக்சபா தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் வெளியான தகவலுக்கு எதிரானதாக தேர்தல் முடிவுகள் இருக்கும். இதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம்.
சோனியா, மூத்த தலைவர், காங்.,
கணிப்புகள் உண்மையாகும்!
ஆந்திராவிலும், மத்தியிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என, தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்புகள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது உண்மை என, நிரூபிக்கப்படும்.
சந்திரபாபு நாயுடு, தலைவர், தெலுங்கு தேசம்
உண்மை தெரிந்து விடும்!
லோக்சபா தேர்தல் முடிவுகளுக்காக பல நாட்கள் காத்திருந்து விட்டோம். இன்னும் சில மணி நேரங்கள் தான் உள்ளன. அதற்கு பின் உண்மை என்ன என்பது தெரிந்து விடும். வெற்றி எங்களுக்கே.
கல்பனா சோரன்,ஜார்க்கண்ட், முக்தி மோர்ச்சா