ADDED : ஜூன் 24, 2025 09:36 PM
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேணு, 60. இவர், நேற்று காலையில் ரயில்வே காலனி அருகே உள்ள அத்தாணிபரம்பு என்ற இடத்தில் சாலையோரம் உள்ள டீக்கடைக்கு முன்பாக இறந்து கிடந்தார். அப்பகுதி மக்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஹேமாம்பிகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ஆய்வு செய்தனர். அப்போது, வேணுவின் உடல் கிடந்த இடத்துக்கு அருகே, ரத்த கறைகள் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டாரா, இயற்கை மரணமா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே, இறப்புக்கான காரணம் தெரியவரும், என, போலீசார் தெரிவித்தனர்.