எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்போர் அறை திறப்பு
எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்போர் அறை திறப்பு
எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்போர் அறை திறப்பு
ADDED : ஜூன் 05, 2025 06:55 PM

புதுடில்லி:டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், 6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரமாண்டமான காத்திருப்போர் அறையை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்தார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில், தானுகா அக்ரிடெக் லிட்., என்ற நிறுவனத்தின் சார்பில், 6 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான காத்திருப்போர் அறை கட்டப்பட்டது. நிறுவனங்களுக்கான சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த அறையில், நோயாளிகளை உடன் இருந்து கவனித்துக் கொள்வோர் மற்றும் பார்வையாளர்களுள் தங்கலாம்.
பணிகள் முடிந்த நிலையில், நேற்று இதை முதல்வர் ரேகா குப்தா திறந்து வைத்தார். இதற்கான சிறப்பு பூஜைகளிலும் அவர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, 2014க்கு முன், மிக மோசமான நிலையில் இருந்தது. மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின் தான், இங்கு முழு வீச்சில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது இந்த மருத்துவமனை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு, ஐந்து லட்சம் வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்களும், உள் நோயாளிகளை பார்க்க வருவோரும் தங்குவதற்கு எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. தற்போது தானுகா நிறுவனத்தின் உதவியுடன் இந்த காத்திருப்போர் அறை திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.