அகாலிதளத்தின் முக்கிய தலைவர் சுக்தேவ் மறைவு: அரசியல் கட்சியினர் இரங்கல்
அகாலிதளத்தின் முக்கிய தலைவர் சுக்தேவ் மறைவு: அரசியல் கட்சியினர் இரங்கல்
அகாலிதளத்தின் முக்கிய தலைவர் சுக்தேவ் மறைவு: அரசியல் கட்சியினர் இரங்கல்
ADDED : மே 29, 2025 07:03 AM

சண்டிகர்: அகாலிதளத்தின் முக்கிய தலைவரும், மாஜி மத்திய அமைச்சருமான சுக்தேவ் சிங் திண்ட்சா காலமானார். அவருக்கு வயது 89.
பஞ்சாப் மாநில மூத்த தலைவர், அகாலிதளம் கட்சியின் முக்கிய தலைவருமான சுக்தேவ் சிங்கிற்கு மே 27ம் தேதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ சிகிச்சையில் இருந்து சுக்தேவ் சிங் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 89. நிமோனியா காய்ச்சலுக்கு சிகிச்சையில் இருந்த சுக்தேவ் சிங் உயிர் மாரடைப்பால் பிரிந்தது என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
சுக்தேவ் சிங் திண்ட்சா சங்ரூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டவர். வாஜ்பாய் அரசாங்கத்தில் விளையாட்டு, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
இவரின் மகன் பர்மிந்தர் சிங் திண்ட்சா, பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம், பா.ஜ., கூட்டணி அரசின் போது நிதி அமைச்சராக இருந்தார். சுக்தேவ் சிங் திண்ட்சா மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும், விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.