மதசுதந்திரம் குறித்த அமெரிக்கா அறிக்கை: இந்தியா நிராகரிப்பு
மதசுதந்திரம் குறித்த அமெரிக்கா அறிக்கை: இந்தியா நிராகரிப்பு
மதசுதந்திரம் குறித்த அமெரிக்கா அறிக்கை: இந்தியா நிராகரிப்பு
UPDATED : ஜூன் 28, 2024 06:25 PM
ADDED : ஜூன் 28, 2024 06:09 PM

புதுடில்லி: '' மத சுதந்திரம் குறித்து அமெரிக்காவின் அறிக்கை ஒரு தலைபட்சமானது எனவும், அதனை நிராகரிக்கிறோம்'' என இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் அதிகரித்து உள்ளதாக அமெரிக்கா கூறியிருந்தது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: அமெரிக்காவின் அறிக்கை ஒரு தலைபட்சமானது. இந்தியாவின் சமூக கட்டமைப்பு குறித்து புரிந்து கொள்ளப்படாமல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டுகள், தவறான விளக்கங்களை கலவையாக கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
மத சுதந்திரம் குறித்த அமெரிக்காவின் அறிக்கையை நிராகரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.