தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்ற உ.பி., - ஜிஎஸ்டி அதிகாரி கைது
தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்ற உ.பி., - ஜிஎஸ்டி அதிகாரி கைது
தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்ற உ.பி., - ஜிஎஸ்டி அதிகாரி கைது
ADDED : ஜூன் 10, 2025 09:14 PM
புதுடில்லி:உ.பி.,யில் வணிகர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக, உ.பி., மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசின் ஜி.எஸ்.டி., அதிகாரியை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
டில்லி அருகே உ.பி.,யில் செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று, ஜி.எஸ்.டி., செலுத்தாமல் இருந்தது. இதை கண்டுபிடித்த, நிஷான் சிங் மல்லி என்ற மத்திய அரசின் ஜி.எஸ்.டி., அதிகாரி, அந்த தொழிலதிபருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அதையடுத்து, நிஷான் சிங் மல்லியை தொடர்பு கொண்ட அந்த தொழிலதிபரிடம், நான்கு லட்ச ரூபாயை கொடுத்தால், வழக்கிலிருந்து விடுவித்து விடுவதாக, மல்லி கூறியுள்ளார். அவரின் இந்த மோசடிக்கு, வரித்துறை வழக்குகளை கவனிக்கும் வழக்கறிஞர் அமித் கண்டேல்வால் என்பவரும் துணை போனார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த தொழிலதிபர், சி.பி.ஐ.,யிடம் புகார் கூறினார். சி.பி.ஐ., அதிகாரிகளின் ஆலோசனை படி, நான்கு லட்ச ரூபாயில் ஒரு லட்ச ரூபாயை, நிஷான் சிங் மல்லியிடம் தொழிலதிபர் நேற்று முன்தினம் கொடுத்தார். மறைந்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அந்த அதிகாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.