மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பட்ஜெட் தாக்கல் செய்தார்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பட்ஜெட் தாக்கல் செய்தார்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பட்ஜெட் தாக்கல் செய்தார்
UPDATED : ஜூலை 23, 2024 11:54 AM
ADDED : ஜூலை 23, 2024 11:17 AM

புதுடில்லி: 2024- 25 ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை இன்று (ஜூலை -23) நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்தார். பிரதமர் மோடியின் 3வது முறை ஆட்சி அமர்ந்த பின்னர் தாக்கலாகும் முதல் பட்ஜெட் இது. நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்யும் 7 வது பட்ஜெட் ஆகும். இதன்மூலம் தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்யின் சாதனை முறியடிக்கப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்னதாக அவர் நிதி அமைச்சகம் சென்றார். பின்னர் ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஜனாதிபதி நிர்மலாவுக்கு இனிப்பு ஊட்டினார்.
பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் நிர்மலா பேசியதாவது: இந்தியாவில் வரலாற்று சாதனையாக 3வது முறை பிரதமராக மோடி பொறுப்பேற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பணவீக்கம் மிக குறைந்த நிலையிலே தான் உள்ளது.
இந்தியா பொருளாதாரம் இன்னும் முன்னேறும் நிலையில் உள்ளது. பண வீக்கம் 4 % மாக குறையும். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு, இளைஞர்கள் திறன் முன்னேற்றம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி இளைஞர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அமைச்சர் நிர்மலா கூறினார்.